இணையத்தில் சிறிய அளவிலான ரொக்க கடன்

Fixed Menu (yes/no)

இணையத்தில் சிறிய அளவிலான ரொக்க கடன்

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைகளில் வங்கிகளிலோ அல்லது சிறிய நிதி நிறுவனங்களிலோ சிறிய அளவிலான கடனுதவிகள் பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக தான் தெரிகிறது.
இந்தக் குறையைப் போக்கவே சில நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இணையத்தில் சில செயலிகள் மூலம் சிறிய அளவிலான கடன் உதவிகளை அளித்து வருகின்றன. இவற்றை விண்ணப்பிப்பது மற்றும் பெறுவது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Small Loan on Internet, Tamil Language Article (Pic: elite...)

இணையத்தில் விண்ணப்பிக்கும் முறை

  இணையத்தில்  கடனுதவி பெற முதலில் சரியான செயலியை தங்கள் அலைபேசியில் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் பின்னர்  அலைபேசி எண்ணை பதிவிட வேண்டும் அதன் மூலம் பெறப்படும் ரகசிய எண்ணை அதில் உள்ளீடு செய்ய வேண்டும். பின் செயலியில் உள் நுழைந்தவுடன் வாடிக்கையாளரின் பெயர், பிறந்த தேதி , மாத வருமானம் , பான் எண், கடன் பெறுபவர் தற்காலிக மற்றும் நிரந்தர முகவரி , கடன் பெறும் நோக்கம்  ஆகியவற்றை பதிவிட வேண்டும். 

தேவையான ஆவணங்கள்

  இதற்காக பான் கார்டு ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்றவை ஆன்லைன் மூலம் பெறப்பட்டு கடனுதவிக்காக உள்ளீடு செய்யப்படும்

Cibil சோதனை
        உள்ளீடு செய்யப்பட்ட தகவல்களை சோதனையிட்டு இதற்குமுன் ஏதேனும் வங்கி கணக்குகளில் பணம் திருப்பி செலுத்தப்படாமல் உள்ளதா என்று ஆய்வு செய்து Cibil score அடிப்படையில் கடன் தொகையை தேர்வு செய்கிறது.இணையத்தில் பொருள் வாங்க

  சில செயலிகள் கடனுதவி மட்டுமல்லாமல் நமக்கு தேவையான நகைகள் , துணிகள் மற்றும் பொருட்கள் போன்றவற்றை இணைய வழி மூலமாக வாங்குவதற்கு உதவி செய்கின்றன.இதற்காக சில செயலிகள் வட்டி மற்றும்  இலவசமாகவும் கடனுதவி வழங்குகின்றன இதனால் நமக்கு தேவையான பொருட்களை இணைய வழி மூலமாக வாங்குவது மிகவும் எளிதாகிறது.மேலும் இவற்றை மொத்தமாகவோ தவணை முறையிலும் செலுத்தும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

கடன் தொகையை திருப்பி செலுத்தும் கால அளவு

இதன் கால அளவானது ஒவ்வொரு செயலிக்கும் மாறுபடும் பெரும்பாலான செயலிகளில் 15 நாள் மட்டுமே கால அளவாகும் சில செயலிகளில் ஒன்று முதல் 36 மாதம் வரை கால அளவு மாறுபட்டிருக்கும்.
இதில் கொடுக்கப்படும் கால அளவானது இதற்குமுன் ரொக்க கடன் வாங்கி திருப்பி செலுத்திய பழைய பதிவின் அடிப்படை மற்றும் கடன் தொகையின் பொருளாதார நிலையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. சரியான கால அளவில் கடன் தொகையானது திருப்பி செலுத்தப்படவில்லை எனில் மறுமுறை கடன் பெறும் பொழுது கொடுக்கப்படும் கால அளவானது குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

செலுத்தும் வட்டி வரி மற்றும் செயலாக்க தொகை

   இந்தத் தொகையானது ஒவ்வொரு செயலிக்கும் மாறுபடும் உதாரணமாக ஒரு செயலியில் ரூபாய் 5 ஆயிரம் கடன் தொகை உள்ளீடு செய்யப்பட்டு அதில் சேவை வரியாக 18% 90 ரூபாய் மற்றும் வட்டி 1.35 சதவிகிதம் 67.5 ரூபாய் செயலாக்க தொகையாக 592 இது போக மீதமுள்ள 4250 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் தொகையை அதன் குறிப்பிட்ட கால அளவான 15 நாட்களில் திருப்பி செலுத்தர விடில் அதற்கான அபராதத் தொகை விதிக்கப்படும் மற்றவை போன்றே வட்டி விகிதம் மற்றும் தொகையானது ஒவ்வொரு செயலிக்கும் மாறுபட்டுக் கொண்டிருக்கும்


 தற்போதைய நவீன உலகில் இதைப்போன்ற  செயலிகள் தங்களால் ஆன உதவிகளை சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமாக செய்து கொண்டிருக்கின்றன.


இதைப்போன்று கடனுதவி பெற சில Link கீழே கொடுக்கப்பட்டுள்ளன .இந்த கட்டுரை உங்களுக்கு பிடிக்குமா? ஆம் என்றால்! எனவே உங்கள் வலைத்தளம் / டிஜிட்டல் தளத்திற்கு ஒத்த உள்ளடக்கத்தைத் தயாரிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

** See, which Industries we are covering for Premium Content Solutions!


Web Title: Premium Tamil Content on Small Loan on Internet

WordPress.com

Post a Comment

0 Comments